Friday, October 28, 2016

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை-தந்தை பெரியார்

தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலி யார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்சக்கணக்காகக் கூடி, என்னை ஆடம்பரமாக வரவேற்று பல சங்கங்களின் சார்பில் வரவேற்பு அளித்து, நமது முயற்சிகள் ஈடேறத் தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக முதன் முதல் 1001 ரூபாய் பரிசளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான  நன்றியைத் தெரிவிக்கின்றேன். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, நான் ஏதோ செய்து விட்டதாக வரவேற்புகள் அளித்தது எதற்கு என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையில் அப்புகழ்ச்சிகளுக்கெல்லாம் நான் தகுதியுடையவனல்ல. ஆனால், எனது தொண்டின் கருத்தினிடமும், அவசியத்தினிடமும், நீங்கள் வைத்துள்ள உண்மை அன்பும், ஆசையுமே இதற்குக் காரணமென எண்ணுகிறேன்.

periyar with childrenமேலும் எனக்கு ஊக்கத்தைத் தூண்டவே எனக் கருதுகிறேன். இந்த நன்றி, வார்த்தையால் மட்டும் போதாது. எனினும் கருத்திற் கிணங்க நீங்கள் இட்ட பணியை நிறை வேற்ற எனது ஆயுள்வரை தயாராக இருக்கிறேன். (கை தட்டல்) நான் உங்க ளுக்காகப் பல தொண்டுகள்  செய்ததாக எனக்கு முன் பேசிய தலைவர்கள் கூறி னார்கள். ஆனால், நான் தமிழர்களுக் காகச் செய்ததைவிட மற்றவர்களுக்காகச் செய்ததே மிக அதிகமாகும். நீதிக் கட்சி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்காகச் செய்ததைவிட, காங்கிரசிற்கு நான் உழைத்தது கணக்கு வழக்கில்லை. எனது வாலிபப் பருவத்தை யும், ஊக்கத்தையும் காங்கிரசிற்காகவே கழித்தேன். இன்று அதன் சக்கையைத் தான் உங்களுக்காகச் செலவிடுகிறேன். நான் முன்பு சென்றது தப்பு வழி என உணர்ந்து திருந்தி சென்ற 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நான் கோரிய பலனில் நூற்றில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை. ஓரளவுக்குத் தமிழர்களுக்கு உண்மையைத் தெரிவித்து வருகிறேனே ஒழிய, இன்னும் காரியம் கைகூடவில்லை. சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சங்கங்கள் இன்று எனக்கு வரவேற்பளித்தன. அவை களில் தொழிலாளர்கள் சார்பாகவும், முஸ்லிம்கள் சார்பாகவும், விசுவப் பிராமணர்கள் சார்பாகவும் அளித்த வரவேற்புப் பத்திரங்களையே மற்றவை களைக் காட்டிலும் நான் பெருமையாகக் கொள்ளுகின்றேன். தொழிலாளர்கள் சம்பந்தமாக இன்று சிலவற்றைக் கூற ஆசைப்படுகிறேன்.

அன்பும், பக்தியும், கவலையும் தொழிலாளரிடமே!
முன்பு இரண்டொரு சந்தர்ப்பங்களில் சென்னையில் நடைபெற்ற கடற்கரைக் கூட்டங்களில் தொழிலாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியுள்ளேன். எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மை யில் அன்பும், பக்தியும், கவலையும் வேறெதையும்விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருடமாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழி லாளர் சங்கத்தை அரசியல் கூட்டமும், சுயநலக் கூட்டமும் வேட்டையாடின. அவைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், பின்பு உண்மை உணர்ந்து தொழிலாளர்களை அரசியல் புரட்டுக் காரர்களிடத்தி லிருந்தும், சுயநலக் கூட்டத்திலிருந்தும் விடுவிக்கப் பெரிதும் பாடுபட்டேன்; முடியவில்லை. காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர்கள் மயங்குவது அறியப் பெரிதும் வருந்தி னேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கக் கூடாதென்று அவர்களை எவ்வளவோ வேண்டியும் சில போலி களை நம்பி வேலை நிறுத்தம் ஆரம்பித்த தால் தொழிலாளர்கள் காட்டிக் கொடுக் கப்பட்டனர். நான் வேண்டாமென்ற வேலை நிறுத்தத்தை மீறி நடத்துவது கண்டும் பின்னிடாது, தொழிலாளர்களுக் காக அதில் கலந்துகொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக் காலத் தலைவர்கள் உணர்வார்கள்.

தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை
எதனால் தொழிலாளர் நன்மை அடைவார் என்பதில் எனக்கும் அரசிய லாளர்கள், தொழிலாளர்களுக்கும் அபிப் பிராய பேத மேற்பட்டதால் என்னால் தொழிலாளருடன் அதிகமாகக் கலந்து கொள்ள முடியாது போயிற்று. எனினும் தொழிலாளர்களின் விடுதலையே தமி ழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லா தாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லா தார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத் தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழிலாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் அவ்வியக்கம் எத்தன்மையது என்பதை உணர்வர். இந்து மதக் கோட்பாட்டின்படி நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும் உலகத்தில் சூத்திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமிகள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வருகின் றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப் பனர்கள் அத்தனை பேரும் முதலாளிகள், நாம் அனைவரும் தொழிலாளிகள். பார்ப்பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க்கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.

தொழிலாளரை ஆதரியுங்கள்
அந்த வழியில் எனக்கு விழிப்பேற்பட்ட காலம் முதல் சூத்திரன் என்று சில சோம் பேறிகளால் பேரிடப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகி றேன். அவர்கள் வார்த்தைகளை நம்பி தொழிலாளிகள் இன்று எங்களைப் பரிகசித் தாலும், கேலி செய்தாலும் கடைசி வரை நாங்கள் தொழிலாளிகளுக்காகவே உழைப் போம். இன்று வேலை நிறுத்தத்தால் சூளை மில் முதலிய மில் தொழிலாளர்கள் கஷ்டப் படுகின்றனர். முன்னின்ற தொழிலாளர் தலைவர் பலர் அரசாங்கத் தலைவர் களுக்குக் கீழ்ப்படியாத காரணத்தாலேயே இன்று தொழிலாளிகள் கஷ்டப்படுத்தப்படு கின்றனர். எனவே, நாம் அத்தொழிலாளர் களுக்குச் சகாயம் செய்வதுடன், வேலை யிழந்த பலருக்கும் நம்மால் ஆகும் வேலை களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென உங்களை வணக்கமாகக் கேட்டுக் கொள் கிறேன். இக்கூட்டத்தின் சார்பாகக்கூட தொழிலாளர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்.

அடுத்த ஆண்டில் ரூ. 10001 பெறுவேன்!
1001 பேர் சிறை சென்றதன் அறிகுறியாக நீங்கள் இன்று 1001 ரூபாய் கொடுத்தீர்கள். இது எனது சொந்தச் செலவிற்கல்ல. நமது தொண்டு, இயக்கம், எண்ணம் நிறைவேறு வதற்காகவே உதவினீர்கள். இதைப்போல் மற்ற ஜில்லாக்காரர்களும் செய்ய வேண்டுமென வழிகாட்டினர் சென்னைத் தோழர்கள். நாம் எண்ணுவது சரியாயிருக்கு மானால், இனியும் ஒரு  வருடம் ஆச்சாரி யார் நம்மீது கருணை வைத்தால் அடுத்த ஆண்டில் 10001 ரூபாய் பெறுவேன் எனக் கருதுகிறேன். முதன் மந்திரியாரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டில் 10001 தொண்டர்களைப் பிடிப்பதன் மூலம் நமக்கு 10001 ரூபாய் நீங்கள் கொடுக்க வழிசெய்து  உதவ வேண்டுகிறேன்.

சிறை செல்வது பிரமாதமல்ல
சிறை சென்றதில் புகழோ, தியாகமோ ஒன்றுமில்லை. அதன் ரகசியம் எனக்குத் தெரியும். என்னுடைய வழக்கில்கூட  அய்க் கோர்ட்டு நீதிபதி முன்பு, 7 தடவை சிறை சென்றவருக்கு இது என்ன பிரமாதம்? என்று கூறியதாகக் கேள்வியுற்றேன். ஒரு காரியத் திற்காகத்தான் தாங்கள் சிறையில் கஷ்டம் அனுபவித்ததாகச் சிலர் சொல்வது, வெளி யில் வந்தால் என்ன கூலி என்பதற்காகவே, இதை எதிரிகள்தான் சொல்லிக் கொடுத் தார்கள். மந்திரி வேலை முதலில் எனக்குத் தான் என உரிமை பாராட்டவே தாங்கள் கஷ்டமனுபவித்ததாகக் கூறுவதுண்டு. உண்மையில் நமது உணர்ச்சியை மாற்றக் கூடிய நிலையில் அவ்வளவு கஷ்டம் சிறையில் ஒன்றுமில்லை. சிறை செல்வதால் ஏற்படும் பலாபலனை உணர்ந்தே செல்லுகிறோம். இதில் என்ன தியாகம் இருக்கிறது? நான் சிறையில் அதிகம் கஷ்டப்படவில்லை. 3 சிறை அதிகாரிகளும் என்னை நன்கு கவனித்தனர். ஆனால், அரசாங்கத்தின் பழிவாங்கும் எண்ணம் அங்கு தாண்டவமாடுகிறது. உடல் நோயுற்ற வர்களிடத்துச் சிறிதுகூட கருணை காட் டப்படவில்லை. அவர்களை ஒழிக்கவே டாக்டர்கள் நினைக்கின்றனர்.

சிறைச்சாலை டாக்டர்கள் போக்கு
முன்பு பேசியதுபோல இன்று நான் பேச முடியவில்லை. எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றதென சில தலைவர்கள் எனக்குப் புத்தி புகட்டுவதுண்டு. அது எனக்கு முடிவதில்லை. ஆனாலும் ஓரள வுக்கு அடக்கியே பேசுகிறேன். வெளியில் காயலா கண்ட ஒருவன் 6 மாதத்தில் செத்து விடுவான் என்றால், சிறையில் 15 நாட் களிலேயே இறந்து படுவான். இதற்கு அரசாங்கத்தாரோ, மற்ற யாரோ, யார் பொறுப்பாளி என்று என்னால் கூற முடியாது. அல்லது அந்த நிர்வாகத் தோர ணையோ என்னவோ தெரியவில்லை. ஒருவனுக்கு நோய் என்றால் அவன் பொய்  பேசுவதாகவே டாக்டர்கள் நினைகின்றனர். இன்னும் சொல்வேன்; ஒருவனுக்கு நோய் என்றால் காதிலிருக்க வேண்டிய ஸ்டெ தெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டே அவனை டாக்டர்கள் பரிட்சிக் கின்றனர். இதை ஏன் சொல்லுகிறேனென் றால் கைதிகளை அவ்வளவு மோசமாக நினைக்கின்றனர். இதைப் பற்றிச் சர்க்கார் சிறிதுகூடக் கவலை எடுத்ததாகத் தெரிய வில்லை.

சட்டம் மீறல் - சண்டித்தனம் நமது கொள்கையல்ல
இதனால் உங்களைச் சிறைக்குச் செல்லுங்கள் என நான் கூறவில்லை. ஏன்? மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கக் கூடாது  என்பதே எனது எண்ணம். காரணம்? அது பின்னர் நமக்கே திரும்பிவிடும். பலவற்றிற்கும் பட்டினி யிருந்த காந்தி இன்று பட்டினி இருப்பது கூடாதென்கிறார். ஏன்? பலர் சிறு காரியங் களுக்கும் அதைப் பின்பற்றுகின்றனர். அதேபோலச் சட்டம் மீறல், சிறை செல்லும் உணர்ச்சி, அடாவடி, சண்டித்தனம் ஆகிய வைகளை அவர்களே கற்றுக் கொடுத்தனர். இந்த 24 மாத ஆட்சியில் 100, 200 இடங் களில் சத்யாக்கிரகக் கூப்பாடு கேட்கின்றது கண்டு வருந்துகின்றனர் காங்கிரஸ்காரர்கள். இரண்டு பக்கங்களிலும் தொல்லை. என்ன செய்வது என்றே முடிவுக்கு வரமுடியாது தவிக்கின்றனர்.  எனவேதான், காரணம் சொல்லாது இந்தி எதிர்ப்பாளர்களை வெளியில் விட்டனர்.  தொண்டர்கள் விடுதலைக்கு இதுவரை சரியான காரணம் சொல்லப்படவில்லை.

சட்டம் மீறக் கூடாதென்பதே எனது எண்ணம். ஆனால், மக்கள் உணர்ச்சியைத் தப்பாக எண்ணி அதனை அடக்க அரசாங் கத்தார் தப்பான முறைகளைப் பலவந்தமாக உபயோகித்தால் நியாயமான உரிமைகளை இழக்க எவனும் பின்னிட மாட்டான்.

மூச்சு விடுவதே சட்ட விரோதமானால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்வது மேலா? சிறை செல்வது மேலா? எனவே, மக்கள் மீது அரசாங்கத்தார் மீண்டும் அடக்குமுறை உபயோகிக்க முன் வந்தால் அதனை வரவேற்பேனே ஒழிய, அதற்காகச் சிறிதும் பயப்பட மாட்டேன்.ஏமாற்றப் பார்க்கின்றனர்!

இந்தி எதிர்ப்பைப் பற்றி ஏமாற்றிக் காரியம் செய்ய எண்ணுகின்றனர். நேற்று கூட இந்தியை எடுத்து விடுவதாக ஆச் சாரியார் சொன்னார். எனவே, மறியல் செய்ய வேண்டாம் என இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியாயிருந்த ஒரு அம்மையார் சொன்னதாகப் பத்திரிகையில் பார்த்தேன். அது உண்மையானால் அன்று சென்ட்ரல் ஸ்டேஷனில் காலில் விழுந்த மூர்த்தியாரி டமே ஆச்சாரியார் கூறியிருக்கலாமே இந்தியை எடுத்து விட்டேன் என்று. அதை விட்டு யோசிக்கின்றேன் என்பானேன். எனவே, கட்டாயம் எடுபடவில்லை என்பது விளங்கவில்லையா? எனவே, மக்களை ஏமாற்றத்தானே இது. இந்தி சம்பந்தமான சர்க்கார் உத்தரவை நேற்று விடுதலையில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது எல்லாப் பள்ளிக்கூட அதிகாரிகளுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது. அதில் கட்டாயம் என்பது நன்றாக எழுதப்பட்டிருக்கின்றதே. 100 பள்ளிகளிலிருந்து இன்று 225 பள்ளிகளி லாயிற்று. இன்று 4, 5, 6ஆம் பாரங்களிலும் வைக்கப் போவதாகச் சொல்லுகின்றனர். இதில் தேசியம் ஒன்றுமில்லை. வேறெ தையோ எண்ணி தமிழர்மீது கட்டாயமாகச் சுமத்துகின்றனர்.

அகராதி கூறுகிறதே!
இனி, நாங்கள் வேறு; ஆரியர்கள் வேறு என்பதைப் பல இடங்களில் கூறி யுள்ளோம். பல பார்ப்பன நண்பர்கள் தனியே என்னிடத்தில் வந்து இதை மட்டும் விட்டுவிடு; மந்திரிசபையை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கு என்று கூறுகின்றனர். ஆனால், இந்தி என்றால் ஆரியர் மொழியென அகராதி  கூறுகின்றது. நீங்கள் எடுத்துப் பாருங்கள். அந்த ஆரிய மொழி யைத் தமிழர் தலையில் ஏன் கட்டாயப் பாடமாகப் புகுத்த வேண்டும்? பல பத்திரிகைகள் இந்துஸ்தானி என்று கூறி னாலும், சர்க்கார் உத்தரவு  இந்தி என்றுதான் கூறுகிறது; ஒரு இடத்தில் இந்தி என்பது; பின்னர் இந்துஸ்தானி என்பது; 200 வார்த் தைகள் படித்தால் போதும், கட்டாயமில்லை; பாசாகாவிட்டாலும்  பரவாயில்லை; இப்பொழுது அசட்டை செய்தால் பின் னால் உத்தியோகங்கள் கிடைக்காது வருந்த நேரிடும் என்று இடத்திற்குத் தக்கவாறு பேசுவதன் கருத்தென்ன? எனவே, இனி உண்மை கூறாது, சூழ்ச்சி யாகச் செய்யும் தந்திரங்களை நினைக்கும் போது இதில் ஏதோ பின்னால் ஆபத்து இருக்கிறதென உணருகிறோம். எனவே, எந்த விதத்திலும் ஆரிய பாஷை கட் டாயப் பாடமாகாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான், பின்னர் நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியும்.

தமிழ்க் கலையைக் காப்பது தமிழன் கடமை
ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.

கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவைகள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியிலுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வதாலேயே பலத்த கிளர்ச்சி செய் கிறோம். இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண்டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம். இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்.

லட்ச ரூபாய் வேண்டும்
தென்னிந்திய நலவுரிமைச் சங்கமென்பது காங்கிரஸ்காரர்களால் 500, 1000 அடி ஆழத்தில் புதைப்பட்டதாகச் சொல்லப் படும் கட்சியாகும். அக்கட்சி புதைக்கப் பட்டதா? அன்றி நாட்டில் வேரூன்றி கிளை விட்டு ஓடுகின்றதா? என்பதைக் கண்ணுற்றவர் அறிவர். சென்னையிலும், வெளி ஜில்லாக்களிலும் காங்கிரசை விட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆங்காங்கு கிளைச் சங்கங்கள் நிறுவ வேண்டும். இதைத் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு அல்லாது இதைக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு வேலை செய்ய வேண்டும். நமக்கு பணத்தைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு ஆள் பலம் அதிகம் என்பது காண மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந் ததோ, அதேபோல் தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போக வேண்டும். அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினா யிரம், லட்சக்கணக்கில் சேர்க்கலாம். 6 மாதத்தில் லட்ச ரூபாய் சேர்த்தால் ஒழிய நமக்கு வெற்றியில்லை. எனவே, ஒவ் வொரு ஜில்லாத் தோழர்களும் இம்முயற் சியில் ஈடுபட்டு உதவ வேண்டுகிறேன்.

-----------------------------------
18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு- "குடிஅரசு" - சொற்பொழிவு - 25.06.1939

மதச்சார்பற்ற என்பதன் பொருள் என்ன?

Image result for periyar


பார்ப்பான் உயிர் கடவுள் பொம் மையிலும்கல்லிலும் தான் இருக்கிறதுஅவை ஒழிந்தால்பார்ப்பானைப் பிராமணன் என்றோசாமி என்றோமேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்கமாட்டான்.
பூணூல் இல்லாத பார்ப்பனர் காங்கிரஸ்காரர்கள்
இப்போதே பார்ப்பனர் தங்களுக்குக் கூண்டோடு அழிவுக்காலம் வந்துவிட்டது என்று கருதிஎந்தப் பாதகத்தைச் செய் தாவது - அதாவது யாரைக்கொன்றாவதுமக்களை எல்லாம் காலிப்பயல்களாகச் செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தீர்மானித்துஇக்காரியத்தில் (ஒவ்வொரு பார்ப்பானும்) தங்களாலான கைங்கரியத்தைச்செய்து பார்த்து விடத் துணிந்துவிட்டார்கள்.
இதற்கு ஆதாரம் இந்நாட்டில் எங்குப் பார்த்தாலும் நடந்துவரும் அயோக் கியத்தனங்களும் காலித்தனங்களுமே போது மானவையாகும். இந்த நிலைக்குப் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய காங்கிரஸ்காரர்களும் பெரும் காரணஸ் தர்களாகவும்பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார் .
தொழிலாளர் என்று கூச்சல் பார்ப்பனக் கூட்டு முயற்சியே!
பார்ப்பனர்களுக்கு அவர்களது பார்ப்பனத் தன்மை இறங்கிக் கொண்டு வருகின்றது. காங்கிரஸ்காரர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் ஆதிக்க வாழ்வு இறங்கியே விட்டது. ஆகையால் இரு சாராரும் சேர்ந்து தங்களால் செய்யக்கூடிய எல்லாப் பாதகச் செயல்களையும் செய்து பார்த்து விடுவது என்று துணிந்து விட்டிருக்கிறார்கள். இப்போது வேலை நிறுத்தம்தொழிலாளர் என்று கூச்சல் போடுவதெல்லாம் பார்ப்பனக் கூட்டு முயற்சிதான்.
இன்னும் பல பெரிய கேடுகள் ஏற் படலாம். இன்றைய திராவிட முன்னேற்ற (பகுத்தறிவு)க் கழகத்தைக் கவிழ்க்கும் வரை (அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது) ஓயாமல் பல கேடுகளைக் செய்துதான் வருவார்கள். மக்கள் சகித்துக் கொண்டுதான் தீரவேண்டும். ஏன் என்றால்பார்ப்பான் ஒழிவதும்காங்கிரஸ் ஒழிவதும் இலேசான காரியம் அல்ல.
பெரிய சதி முடிச்சுடன் திரிகிறார்கள்
எளிதில் பிரிய முடியாதபடி அவைஒன்றுக்கொன்று ஆதரவில் பெரிய முடிச்சுப் போட்டுக்கொண்டிருக்கின்றன.
இரண்டும் தங்கள் ஆதிக்கக் கட்டடத் தைக் கடவுள்மதம்கோவில்உருவம்இவை சம்பந்தமான கட்டுக்கதைகள் ஆகிய அஸ்திவாரத்தின் மீதே கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள்.
இவர்கள் ஒழிக்கப்பட வேண்டுமென் றால் மக்களுக்குப் பகுத்தறிவேற்பட்டுப் பகுத்தறிவுக்கு மாறான எதையும் ஒழித்துக் கட்டுவது என்ற துணிவு தமிழர்களுக்கு ஏற்பட்டால்தான் முடியும்.
காந்தி சொன்னதன் முழுப் பொருள் என்ன?
இதை மனத்தில் வைத்துத்தான் காந்தியாரும் காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும்’ என்றும்ஆட்சி - செக்குலர்மதச்சார்பற்ற - பகுத்தறிவு ஆட்சியாக இருக்கவேண்டுமென்றும் சொன்னார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டுவிட்ட படியால்காங்கிரஸ் கலைக்கப்படாமல் போய்விட்டதோடுசெக்குலர் ஆட்சி என்று சட்டம் செய்தும்அது அமுலுக்குக் கொண்டுவர முடியாமலே போய்விட்டது.
இப்போது அதை மதச்சார்பற்ற ஆட்சியாகச் செய்யக்கூடிய தி.மு.க. ஆட்சி நல்வாய்ப்பாக ஏற்பட்டிருந்தும் அதைக் காங்கிரசாரும்பார்ப்பனரும் ஒழிக்கப் பார்க்கின்றார்கள்.
செக்குலருக்குப் பார்ப்பனர் கூறும் விபரீத வியாக்கியானம்
செக்குலர் - மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு இவ்விருசாராரும் என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்கவேண்டு மென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக்கூடாது என்பது பொருள் அல்லஎல்லா ஆண்களையும் சமமாகக் கருதிக்கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள்’ என்பது போல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோதுஅதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
செக்குலர் எதற்குப் பொருந்தும்?
செக்குலர்’ என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தி னார்களே ஒழிய வேறு மொழிச் சொல் லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல் லுக்கு வியாக்கியானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழியஅதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும்காங் கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத் தமாக முடியுமா?
அந்தச் சொல்லும்கூட அரசாங்க காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லு கிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்ல வில்லையே!
அப்படி இருக்க இதில் பார்ப்பனருக்கும்காங்கிரசாருக்கும் ஏன் ஆத்திரம் வர வேண்டும்?
ஏன் என்றால்தங்கள் வாழ்வு அதில் தான் இருக்கிறதுஅதில்தான் மக்களுடைய முட்டாள்தனத்தில் கிளைத்து எழுந்த கடவுள்மதம்கோவில்அதில் உள்ள கற்சிலைகள்அவற்றின் பொம்மைகள்சித்திரங்கள்படங்கள்தட்டிகள் முதலி யவைகள் இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகின்றது.
தமிழர்கள் கடமை என்ன?
எதை எதையோ சொல்லிஎதை எதையோ செய்து எப்படியோ போகட்டும்நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லைஅதற்குப் பெரும் கூட்டம் தயாராய் இருக்கிறது. ஆனால் பார்ப்பனரும்காங் கிரஸ்காரர்களும் (காங்கிரசிலும் தனித் தன்மையுள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர்கள் வெளிப்படையாய் வரப்பயப்படுகிறார்கள்) அல்லாத பொது மக்கள் (தமிழர்கள்) கடமை என்ன?
நம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊரில் பொதுக்கூட்டம் போட்டுஅரசாங்க காரியங்களை ஆத ரித்துப் பாராட்டித் தீர்மானங்கள் போட்டுஅத்தீர்மானங்களை முதலமைச்சருக்கும்மத இலாகா அமைச்சருக்கும் அனுப்பிய வண்ணம் இருக்க வேண்டியது அவசியம்.
பார்ப்பனப் பிரச்சாரத்தைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?
பார்ப்பனர்கள் தினந்தோறும் தங்கள் பத்திரிகைகளில் யார்யாரோ அநாம தேயங்கள் பேரால் பல கடிதங்கள் வெளி யிட்டு வருகிறார்கள். நாம் அப்படிச் செய்யாவிட்டாலும்பொதுக்கூட்டங்கள் போட்டுப் பேசித் தீர்மானங்கள் செய்து அனுப்பவேண்டாமா?
இப்படிச் செய்வது ஒரு வகையில் பார்ப்பனர் யோக்கியதையையும்காங் கிரசார் யோக்கியதையையும் பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாகும்.
சூத்திர வாழ்க்கையில் சுகமா?
பொதுவாக நம் தமிழ் மக்கள்தாங்கள் என்றென்றும் குத்திரர்களாககீழ்ஜாதி களாக இருக்க ஆசைப்படுகிறார்களாஇல்லாவிட்டால் அதை மாற்றத் தமிழர்கள் செய்யும் செய்யப்போகும் காரியம் என்ன என்று கேட்கிறேன். தாங்களாகச் செய்யா விட்டாலும் ஆட்சியையாவது ஆதரிக்க வேண்டாமா?
ஒவ்வொரு தமிழனும்தன் வீட்டில் உள்ள கடவுள்-மத சம்பந்தமான படங்களை எடுத்து எறியவேண்டும்எடுத்து எறிந்துவிட்டுத் தகவல் கொடுக்கவேண்டும் பொதுக்கூட்டத்தில் காட்டிக்கிழித்து எறிய வேண்டும்.
இவற்றாலும்இப்படிப்பட்ட காரியங் களாலும்தாம் தமிழர் இழிவு நீங்கும்.
தந்தை பெரியார் - உண்மை’, 14.12.1971

நீங்கள் அடிமைகள் என்றால் இதை படிக்க வேண்டாம்

மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. இது, பொழுது போக்கிற்கான செய்தியும் அல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமானதாக்குவது என்பது பற்றி இது பேசுகிறது. கப்பலைச் செலுத்துவதற்கு ஒரு மாலுமி எப்படி எல்லாவற்றையும் தயார் செய்வாரோ, அதேபோல், நாமும் மதமாற்றத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறத் தயாராக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால்தான், மதமாற்றத்திற்கான தயாரிப்புகளை நான் மேற்கொள்ள முடியும். மதமாற்றத்தைப் பற்றி புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், பாமர மக்கள் மதமாற்றம் குறித்து அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.  

Image result for ambedkar books in tamil translation pdf free download

மதமாற்றத்தை இரண்டு விதமாகப் புரிந்து கொள்ளலாம். இது, சமூகம் மற்றும் மதம் சம்பந்தப்பட்டது; பொருளியல் மற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது. இதை எப்படிப் புரிந்து கொண்டாலும், தீண்டாமையின் தன்மையையும் அது எப்படித் தோன்றியது என்பதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதைப் புரிந்து கொள்ளா விட்டால், நான் அறிவித்திருக்கும் மதமாற்றத்தின் உண்மையான பொருளை நீங்கள் உணர முடியாமல் போய்விடும்.

தீண்டாமையைப் பற்றியும் அது நடைமுறை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், உங்கள் மீது இழைக்கப்படும் வன்கொடுமைகளை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஆனால், உங்களில் ஒரு சிலரே, இதுபோன்ற வன்கொடுமைகள் எல்லாம் ஏன் நடக்கிறது என்று சிந்தித்திருப்பீர்கள். சாதி இந்துக்களின் கொடுங்கோன்மைக்கு மூல காரணமாக இருப்பது எது? என்னைப் பொறுத்தவரை, இதை நீங்கள் புரிந்து கொள்வது மிக மிக அவசியம் என்று கருதுகிறேன்.

இது, இரு எதிரிகளுக்கிடையே நடைபெறும் சண்டை அல்ல. தீண்டாமைப் பிரச்சினை என்பது வகுப்புப் போராட்டத்துடன் தொடர்புடையது. இது, சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகும். இது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி அல்ல. இது, ஒரு வகுப்பு இன்னொரு வகுப்புக்கு எதிராக இழைக்கும் அநீதியாகும். இந்த வகுப்புப் போராட்டம், சமூக அந்தஸ்துடன் தொடர்புடையது. ஒரு வகுப்பு மற்றொரு வகுப்புடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போராட்டம் உணர்த்துகிறது. ஒரு வகுப்பு மற்ற வகுப்புடன் சமமான நிலையைக் கோரும் போதுதான் இப்போராட்டம் தொடங்குகிறது.

அவர்களுடைய கோபத்திற்கான காரணத்தைப் புரிந்து கொள்வது மிக எளிது. அவர்களுக்கு சமமாக நீங்கள் நடந்து கொள்வது, அவர்களைப் புண்படுத்துகிறது. தீண்டாமை என்பது குறுகிய அல்லது தற்காலிகமானது அல்ல. இது, நிரந்தரமான ஒன்று. இது, தலைமுறை தலைமுறையாக இருக்கக்கூடியது; ஒரு மனிதன் இறந்த பிறகும் தீண்டாமை தொடருகிறது. ஏனெனில், சமூகத்தின் அடிநிலையில் உங்களை வைத்திருக்கும் மதமே சாதி இந்துக்களின் நம்பிக்கையின்படி என்றுமே மாற்ற முடியாத ஒன்றாகும்.

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதில் மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை. நீங்கள் படிநிலைப்படுத்தப்பட்ட இந்து மதத்தில் கீழ் நிலையில் இருக்கிறீர்கள். இறுதிவரை நீங்கள் அங்கேதான் இருக்க முடியும். இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம், என்றென்றைக்கும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் இதன் பொருள். இந்தப் போராட்டத்தை நீங்கள் எப்படி சந்திக்கப் போகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.

இது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை என்றால் வேறு வழியே இல்லை. சாதி இந்துக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அடிமைகளாக வாழவிரும்புகிறவர்கள் இப்பிரச்சினை குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை. ஆனால், சுயமரியாதைமிக்க சமத்துவமிக்க வாழ்க்கையை வாழ விரும்புகின்றவர்கள் இது குறித்து சிந்தித்தாக வேண்டும்.

இப்போராட்டத்தை சமாளிப்பது எப்படி? என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு விடை காண்பது கடினமல்ல. எந்தவொரு போராட்டத்திலும், யாருக்கு வலிமை அதிகம் இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றுவிடுவர் என்பதை இங்கு கூடியிருக்கும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். வலிமையற்றவர், வெற்றிபெறும் வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்க முடியாது. இது அனுபவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி இப்போராட்டத்தில் வெற்றிபெற, உங்களுக்குப் போதிய பலம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் அம்பேதகர் ஆற்றிய உரை.

தமிழ் தேசியம் பேசும் பார்ப்பன அடிவருடிகள்

தமிழ்த் தேசியம் பேசும் பல பேர் அடிப்படையில் பார்ப்பன அடிவருடிகளாக இருப்பதை நீங்கள் பார்த்தீர்ப்பீர்கள். ஆனால்  இதை சில பேர் மறுக்க கூடும். மறுத்துவிட்டு போகட்டும். கடந்த மாதம் 23/09/ 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம் அதற்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்து ஒரு சிறு போராட்டத்தைக் கூட நடத்தத் துப்பில்லாத இந்தப் பார்ப்பன அடிவருடிக் கும்பல், இலங்கையில் பெளத்தமயமாக்கலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்று சொல்வது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும். அது போன்றவர்களுடன் மேடை ஏறியதன் மூலம் பழ. நெடுமாறன் ‘தான் யார்?’ என்ற உண்மையைப் பகிரங்கப்படுத்தி இருக்கின்றார்.
 தமிழ் நாட்டிலே சீண்டுவார் யாருமின்றி இருக்கும் இவர்கள் எதையாவது செய்து தங்களுடைய பெயரை விளம்பரப்படுத்த முடியாதா என்று பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டிலே பல சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. பல சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் “என்னடா ஒரு இந்துவ இன்னொரு இந்து கொல்லுறீங்க, ஏன்டா அவனை கீழ்சாதினு சொல்லி கோயில்ல விட மாட்டேனு சொல்றீங்க” என கேட்கத் துப்பில்லாத இந்தப் பார்ப்பன அடிவருடிக் கும்பல், இங்கே கிழித்தது போதாது என்று இப்போது இலங்கையில் கிழிக்கப் போயுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த பல ஈழத் துரோகிகளின் பேச்சைக் கேட்டு, சரணடைந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்த அந்த மக்கள் இன்னும் தங்களுக்கான வாழ்வாதாரத்தையே உருவாக்கிக் கொள்ளவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அவர்களை இன்னும் கூட இரண்டாம் தர குடிமக்களை விட மோசமாகவே நடத்திக்கொண்டு இருக்கின்றது.
 இன்னும் அந்த மக்கள் தங்களது சொந்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்படவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மக்கள் தங்களுக்கான விடுதலையின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்யும் முக்கியமான கட்டத்தில் உள்ளனர். தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதா, இல்லை தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் விரும்பும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து ஒரு புரட்சிகர போராட்டத்தை முன்னெடுப்பதா என்று. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அது இந்திய மேலாதிக்கத்தையும், இந்தப் போரை முன்னின்று நடத்திய இந்திய ஆளும்வர்க்கத்தின் வர்க்க நலன்களையும் பாதிக்கும் என்பதால் அவர்களை நக்கிப் பிழைக்கும் இந்த இந்து மக்கள் கட்சி அங்கே மேல்மட்டத்தில் சில சிங்கள வெறியர்களால் திணிக்கப்படும் சில அடாவடி செயல்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்கே நிரந்தரமாக ஒரு இன பிளவை அதாவது தமிழ்மக்களையும், சிங்கள மக்களையும் பிரிக்கும் சதி வேலையில் இறங்கியிருக்கின்றது. இதற்குப் பின்னால் ஏற்கனவே தமிழ் மக்களை கொல்ல ரகசியமாக சதித் திட்டம் தீட்டி அவர்களை பூண்டோடு ஒழிக்க பார்ப்பன பி.ஜே.பி யுடன் கள்ளக்கூட்டை ஏற்படுத்திக்கொண்டு பி.ஜே.பிக்கு ஒட்டு போடச் சொன்ன கழிசடை கும்பல்களின் சதி உள்ளது.
 விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இப்போது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து காவிபயங்கரவாதிகள் படையெடுப்பது நடந்து வருகின்றது. மும்பையில் தமிழர்களுக்கு எதிராக மராட்டிய வெறியை ஏற்படுத்தி, அவர்களை குறிவைத்துத் தாக்கிய சிவசேனா இலங்கையில் தன்னுடைய கடையை இப்போது திறந்திருக்கின்றது. அங்கே தமிழ்த் தேசியவாதியாக அறியப்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் திரிகோணமலையில் அதன் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வை.யோகேஸ்வரன் வவுனியாவில் சிவசேனாவின் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மறவன்புலவு சச்சிதானந்தம் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்த் தேசியம் எப்போதுமே மதவெறியர்களுடன் மிக எளிதாக கைகோர்த்துக் கொள்கின்றது. காரணம் அதன் மேட்டுக்குடி சாதிவெறியாகும்.
 தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் எப்படி ஆதிக்க சாதி இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் வகையறாக்களாக இருக்கின்றார்களோ, அதே போல இலங்கையில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் வெள்ளாள சாதியை மட்டுமே பிரநிதித்துவம் செய்யக்கூடியவர்கள். அவர்கள் தான் தமிழ்த் தேசியம் பேசக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் முன்னிறுத்தும் ஆதிக்க சாதிகள் எப்படி இங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் போன்றவர்களை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்வது கிடையாதோ, அவர்கள் மீது ஆதிக்க சாதிகள் தாக்குதல் தொடுக்கும் போது கண்டிக்கத் திராணியற்று சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்களோ, அதே போல அங்குள்ள வெள்ளாள சாதி வெறியர்கள் அங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் போதும் கண்டுகொள்வது கிடையாது. ஏனென்றால் தமிழ்த் தேசியம் என்பது எப்போதுமே பார்ப்பனியத்திற்கு ஆதரவாக ஆதிக்க சாதிகளின் முகமாக செயல்படக்கூடியது. பார்ப்பனியம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தைதான் தமிழ்த் தேசியம். இந்த ஆதிக்க சாதிகளை நக்கிப் பிழைக்கும் போக்குதான் அவர்களை மிக எளிதாக இந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்க வைக்கின்றது. தமிழ்த்தேசியமும், இந்துத்துவாவும் அடிப்படையில் ஒன்றுதான். இரண்டுமே சாமானிய தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. அதனால் தான் அவர்களால் மிக எளிதாக கைகுலுக்கிக் கொள்ள முடிகின்றது.
 இது ஒரு பக்கம் என்றால் கடந்த மாதம் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ‘எழுக தமிழ் 2016’ என்ற நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த இராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழர் தாயகத்தில் இலங்கையில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், தமிழ்த்தேசம் தனித்துவமான இறையாண்மை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்திர அரசியல் தீர்வை வலியுறுத்தியும், யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படு கொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் செப்டம்பர் 24, 2016 அன்று யாழ்ப்பாணம் நகரில் கூடும் ‘எழுக தமிழ்’ பேரணியில் தாயகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் ஏனைய சகோதரத்துவ மதத்தவர்களும் ஓரணியில் திரண்டு இலங்கை அரசின் பெளத்த மயமாக்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறும் உங்கள் அனைவரையும் இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறப்பட்டுள்ளது.
 தமிழ்நாட்டிலே சீண்டுவார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் இந்த இழிபிறவி, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றானாம், மானங்கெட்டவன். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் இந்தக் கேடி, காஷ்மீரில் இந்திய அரசு கொன்று குவித்த ஆயிரக்கணக்கான முஸ்லின் மக்களுக்காக சர்வதேச விசாரணையைக் கேட்பானா? இல்லை காஷ்மீர் உட்பட வடகிழக்கு மாநில மக்கள் கேட்கும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பானா?. நிச்சயமாக கிடையாது. இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது - அது இலங்கை இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு வர்க்க அணிச்சேர்க்கை அங்கே உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே தான் இந்திய அரசின் கைக்கூலிகளாக அங்கே இந்து மதவெறி இயக்கங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது. இதனால்தான் திட்டமிட்ட முறையில் தமிழர் பகுதில் உள்ள இந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழன், சிங்களவன் என்ற முரண்பாடு வெள்ளாள சாதிவெறியர்களின் துணையுடன் பெளத்த- இந்து முரண்பாடாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு வெள்ளாள சாதிவெறியர்களை முன்னிலைப்படுத்தும் தமிழ்த்தேசியம் பேசும் அமைப்புகள் துணையாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிகளை முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியக் கும்பல் இயற்கையாகவே அதன் கூட்டாளியாக மாறியிருக்கின்றது.
 மலையகத் தமிழர்களையும், இலங்கை மக்கள் தொகையில் 10 சதவீதம் இருக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியத் தமிழர்களையும் புறக்கணித்துவிட்டு இலங்கைத் தமிழர் என்று சொல்லப்படும் பெரும்பான்மையான வெள்ளாள சாதிமக்களால் இந்த ‘எழுக தமிழ் 2016’ நிகழ்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தான் அதற்கு இந்து மக்கள் கட்சி போன்ற பொறுக்கி கும்பல் ஆதரவை வழங்கி இருக்கின்றது. பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் பி.ஜே.பிக்கு ஓட்டுபோட்டால் தமிழீழம் மலரும் எனக் கேட்டது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல. அவர்கள் எப்போதுமே இந்துத்துவ பயங்கரவாதிகளுடன் ஒத்திசைவாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த ஒத்திசைவுதான் தமிழகத்தில் பழ.நெடுமாறன் வகையறாக்களை இந்துமக்கள் கட்சியுடன் இணைத்திருப்பதும் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளை சிவசேனாவுடன் இணைத்திருப்பதும்.
 தமிழ்நாட்டில் இருந்தோ, இல்லை இந்தியாவில் இருந்தோ யாரும் இலங்கைக்கு புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது. அதை அந்த மக்களே முடிவு செய்துகொள்வார்கள் - தாங்கள் தனித்து நின்று தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமா, இல்லை சிங்கள ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமா என்று. அப்படியொரு நிலை தெளிவாக அங்கு தெரியும் வரை அதைச் சீர்குலைக்க தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களை பெற்றெடுத்த பார்ப்பன சக்திகளும் செய்யும் சதியை நாம் அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம். அதுதான் அந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த மிகப் பெரிய உதவி.