Friday, September 9, 2016

எத்தனை பேர் படித்தோம் ரோஹித் வெமுலாவின் மனதை ?(How many of us read Rohid Vemula's mind?)

கடைசி முடிவின் முதல் ஆரம்பம்........


Image result for rohith vemula letter in tamil



ரோஹித் வெமுலா ...இந்த பெயரை நீங்கள் கேட்டது உண்டா?...தினம் நீங்கள் செய்தி   வாசிப்பவராக இருந்திருந்தால் அறிந்திருக்க கூடும் . இல்லை என்றால் பிழை   ஒன்றும் இல்லை .அறிந்து கொண்டு நாம் என்ன செய்ய போகிறோம் ?. நமக்கு நம்ம வேலையே நிறைய இருக்கு இதுல இது வேறயா என்று நினைக்கும் உங்களை போல் என்னை போல் இருப்பவர்களால் கொலை செய்ய பட்ட ஒரு சாதாரண மானுடன் தான் வெமுலா. அவன் தற்கொலை செய்து தன்னைத்தான் மாய்த்து கொள்ளவில்லை மாறாக நாம் தான் அவனை தற்கொலை செய்ய தூண்டினோம் .நம்முடைய அலட்சியத்தால், நடவடிக்கையால். பட்டம் பெற்று பயணித்திருக்க வேண்டிய வெமுலா இன்று பட்டாம் பூச்சியாய் நம்மைவிட்டு பறந்து சென்றுவிட்டான். 
தான் இறக்கும் முன்பு தன்  கைப்பட எழுதிய கடிதம் படிப்போர் மனதை உலுக்குவதாக உள்ளது .அவனை  பற்றி ,அவன் மன ஓட்டங்களை பற்றி அறிய இக்கடிதம் நமக்கு உதவுகிறது .அவன் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் ..இதோ அவரே  பேசுகிறார் உங்களுடன்..

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும்  போது நான் உங்களுடன் இறுக்கப் போவது இல்லை .என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள் .உங்களில் சிலர் என்மீது நிஜமான அன்பும் ,அக்கறையும் செலுத்தினீர்கள் என்று   எனக்கு தெரியும் .என்னை மதிப்புடனும் நடத்தீனீர்கள் . யார் மீதும் எனக்கு எந்த  புகாரும்  இல்லை .அவை எப்போதும் என்மீதே எனக்கு இருந்தவைதான் .எனக்குப் பிரச்சனைகள் இருந்திருக்கின்றன . எனது உடலுக்கும் ,ஆன்மாவுக்கும் இடைவெளி வளர்ந்து நான் ஒரு பிசாசைப் போல உணர்கிறேன் . 

  
Image result for rohith vemula letter in tamil
எழுத்தாளனாக வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம் .அதுவும் கார்ல் சாகனைப்போல் ஒரு அறிவியல் எழுத்தாளனாக .ஆனால் ,நான் எழுதும் இந்த கடைசிக் கடிதம்தான் எனது எழுத்தாக ஆகிவிட்டது . 
நான் அறிவியலை நேசித்தேன் .நட்சத்திரங்களை , இயற்கையை நேசித்தேன் . பிறகு மனிதர்களையும் நேசித்தேன் ; அவர்கள் இயர்கையை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிட்டார்கள் என்று அறியாமல் .
எங்களுடைய உணர்வுகள் இரண்டாம்தாரமானவை .எங்களுடைய அன்பு கட்டமைக்கப்பட்டது .எங்களுடைய நம்பிக்கைகள் வர்ணம் பூசப்பட்டவை .எங்களுடைய சுயம் செயற்கையான கலைகளின் வழியே மதிப்பிடப்படுகிறது .காயப்படாமல் அன்பு செலுத்துவதென்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது.
கல்வி, அரசியல் ,என எந்த துறையிலும் ,எந்தவொரு மனிதனும் அவனுடைய எண்ணத்திற்காக மதிக்கப்படுவதில்லை. 
Image result for rohith vemula letter in tamil
ரோஹித் வெமுலா 
ஒரு வாக்குக்காக ,ஒரு எண்ணுக்காக ,ஒரு பொருளுக்காக . என்று தேவைகளின் பொருட்டு மட்டுமே அளவிடப்படும்  
அளவிற்கு ஒரு மனிதனின் மதிப்பு குறுகிவிட்டது.

கல்வி ,அரசியல் ,என எந்த துறையிலும் ,எந்த ஒரு மனிதனும் அவனுடைய எண்ணத்திற்காக மதிக்கப்படுவதில்லை . வாழ்விலும் சாவிலும் கூட. இது போன்ற ஒரு கடிதத்தை முதன்முதலாக எழுதுகிறேன் .முதல் முறையாக ஒரு இறுதி மடல். அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் .ஒரு வேளை ..இதுநாள் வரையிலும் இந்த உலகை ,அன்பை ,வலியை ,வாழ்வை ,மரணத்தை எல்லாவற்றையும் புரிந்துகொள்வதில் நான் தவறுசெய்திருக்கலாம் .எதிலும் அவசரம் தேவையில்லைதான் .ஆனால் நான் எப்போதும் அவசரப்படுபவனாகவே  இருந்திருக்கிறேன் .ஒரு வாழ்க்கையை தொடங்குவதற்கு தீவிரமாக இருந்திருக்கிறேன் .
சிலர்க்கு அவர்களுடைய பிறப்பே சாபம்தான் .என்னுடைய பிறப்பு ஒரு மோசமான விபத்து .எனது பால்யத்தின் தனிமையிலிருந்து எப்போதும் என்னால் வெளிவர முடிந்ததில்லை .தட்டிக்கொடுக்கப்படாத பால்யத்தின் தனிமையிலிருந்து .
எனக்கு எந்த வலியும் இல்லை இப்போது ,எந்த வருத்தமும் இல்லை. வெறுமையாக உணர்கிறேன் .என்னை பற்றி எந்த கவலையுமில்லாத வெறுமை . அதுதான் மிகக் கொடுமையாக இருக்கிறது .அதனால்தான் இதை செய்கிறேன் .
நீங்கள் என்னை கோழை  என்று அழைக்கக்கூடும் .ஏன் ..முட்டாள் ,சுயநலவாதி என்று கூட சொல்லலாம். நான் இங்கிருந்து போய்விட்ட பிறகு , நீங்கள் சொல்வதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை .ஆவி , முக்தி, போன்ற இறப்பிற்கு பின்னான கதைகளை நான் நம்பவில்லை .நான் எதோ ஒன்றை நம்புகிறேன் என்றால் அது நான் நட்சத்திரங்களுக்குள் பயணிப்பேன் என்பதைத்தான் .எனக்கு அந்த உலகைப்பற்றி தெரியும் .
இந்த கடித்தை படிக்கும் யாரவது எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் இந்த உதவியை செய்யுங்கள். என்னுடைய ஏழு மாத கல்வி உதவித்தொகையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனக்கு வர வேண்டி உள்ளது .அந்த பணம் என் குடும்பத்தினருக்கு போய்ச் சேருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .ராம்ஜிக்கு 40 ஆயிரம் கொடுக்க வேண்டும். அவர் ஒரு போதும் என்னிடம் கேட்டதில்லை என்றாலும் ,தயவு செய்து அதை அவர்க்கு கொடுத்துவிடுங்கள்.
என்னுடைய இறுதிச்சடங்கு அமைதியாகவும் ,சுமூகமாகவும் இருக்கட்டும். எதோ தோன்றினேன் பிறகு மறந்துவிட்டேன் என்பதைப்போல நடந்துகொள்ளுங்கள் .எனக்காக கண்ணீர் சிந்தாதீர் .எனக்கு தெரியும் நான் உயிர்த்திருப்பதைவிட சாவில் சந்தோசமாக இருப்பேன்
நட்சத்திரங்களின் நிழலிருந்து ....
பொய் வருகிறேன் ...

சில சம்பிரயத்தங்களை எழுத மறந்து விட்டேன் .என்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல.யாரும் தங்களது வார்த்தைகளினாலோ ,செயல்களினாலோ என்னை தற்கொலைக்குத்  தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு மட்டுமே .இதற்க்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு என்னுடைய நண்பர்களையோ  ,எதிரிகளையோ இதற்காக தொந்தரவு செய்யாதீர்கள் .
Sincerely,
V.R.
17/01/2016
உமா அண்ணா ...உங்கள் அறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டமைக்கு மன்னியுங்கள்...
கடைசி ஒரு முறை ஜெய் பீம்."
     அவன் நம்மை விட்டு நீங்கி சென்றபின் அவன் மனதை அறியக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது அவன் கடிதத்தின் மூலம். ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் மனதை அறிய ஒரு உயிர் சென்றால் தான் முடியும் என்றால் இந்த உலகில் யாரும் உயிருடன் இருக்க முடியாது மற்றும் நாம் மானிடனாக இருக்க லாயக்கற்றவர்கள் என்றுதான் பொருள். 
ரோஹித் வெமுலாக்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?,அவர்களின் பிரச்சனைதான் என்ன?, தற்கொலை செய்வது சரிதானா? இல்லை தற்கொலை ஒரு வகை போராட்டத்திற்கான விதையா? ..என்ன ஓட்டங்கள் தொடரும் ....

No comments:

Post a Comment